சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு அரசுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறாக விமர்சனங்களை வைத்தனர்.

இதனிடையே மாலத்தீவை சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் சூரிய அஸ்தமன நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து மாலத்தீவில் சூரிய அஸ்தமனம். இதை லட்சத்தீவில் உங்களால் பார்க்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் இணைத்திருந்த புகைப்படம் மாலத்தீவு புகைப்படம் இல்லை என்றும் போரா போரா என்ற என்ற பகுதியின் புகைப்படம் என்றும் X அவரது பதிவுக்கு கீழே குறிப்பிட்டுள்ளது. இதனால் நெட்டிசன்கள் அவரது பதிவை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.