சமீபத்தில் அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான கதவு பலத்த காற்றின் மூலம் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அப்போது விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகளின் சோலா பொருட்களும் அதன் வழியாக வெளியே விழுந்தது.

தற்போது அந்த சம்பவத்தின் போது விமானத்தின் அந்த கதவு ஓரமாக அமர்ந்திருந்த பயணி ஒருவரின் ஐபோன் சுமார் 16,000 அடியில் இருந்து விழுந்துள்ளது. இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஐபோன் வேலை செய்வதையும், அதன் பாதி பேட்டரி இன்னும் மீதம் இருப்பதையும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.