புளூஃபின் டுனா உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மீன் ஆகும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆண்டு ஏலத்தில் இந்த மீன் 114.24 மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6.5 கோடிக்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்த ஏலத்தில் ப்ளூ ஃபின் டுனா மீன்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனின் எடை 238 கிலோ ஆகும். இது அமோரி மாகாணத்தில் உள்ள ஓமா பகுதியில் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.