திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து மிக வெளிப்படையாகப் பேசினார். குறிப்பாக சோஷியல் மீடியாக்களில் மக்கள் பதிவிட்டு வரும் கருத்துக்களை அவர் சுட்டிக்காட்டினார். “இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம், அதனால என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்னு புலம்புறாங்க” என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வெச்சிட்டோமே என பலரும் வருந்தி பதிவு போடுவதைப் பார்க்கிறேன். இதுதான் நமது ஐந்து ஆண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த உண்மையான அங்கீகாரம்” என்று குறிப்பிட்டார். தோல்விக்குப் பிறகும் மக்கள் திமுக ஆட்சியை நினைத்து உருகுவதாக அவர் குறிப்பிட்ட இந்த பேச்சு, தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
