சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்தாண்டு காலமும் நான் கடுமையாக உழைத்தேன். உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறியும் நான் உழைத்தேன். உங்களையும் ஓய்வே இல்லாமல் உழைக்க வைத்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

​தொடர்ந்து பேசிய அவர், இதுவரை எந்த அரசும் செய்திராத பல சாதனைகளைத் தனது அரசு செய்து கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். “கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியாக நமது ஆட்சி இருந்தது. இது மக்களுக்கும் நன்றாகத் தெரியும்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். தோல்விக்கு பிறகும் தனது உழைப்பையும், தனது தொண்டர்களின் உழைப்பையும் மதித்துப் பேசிய ஸ்டாலினின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.