ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் பரபரப்பான திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்தின் போது மணமகளின் தாயின் பையில் இருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயுள்ளன.
இந்த சம்பவம் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது. திருட்டு நடந்த நேரத்தில் 13 அல்லது 14 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி ஒருவர் திருமண விழாவிற்கு வந்திருந்தனர். பின்னர் அந்த சிறுவன் மணமகளின் தாயின் பையை திருடிச் சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.
திருட்டுக்கு உள்ளானவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது மகனின் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண விழாவில் கவன குறைவால் கோடி ரூபாய் மதிப்பு உள்ள நகை திருடு போனதால் குடும்பத்தினர் செய்வதறியாது வருத்தத்திற்கு உள்ளாயினர். மேலும் இந்த சம்பவத்தில் சிறுவர்கள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
जयपुर के होटल हयात में 1.50 करोड़ की चोरी –
हैदराबाद के बिजनेसमैन नरेश गुप्ता के बेटे की शादी थी। इस दौरान 14 साल का बच्चा दूल्हे की मां का बैग उठाकर ले गया। बैग में ज्यादातर ज्वैलरी डायमंड की थी। होटल में कुल 180 लोग मौजूद थे। pic.twitter.com/N1LYDfwzJN
— Sachin Gupta (@SachinGuptaUP) August 10, 2024
“>
