மெட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. மெட்டாவில் பின் தொடர்பவர்கள் பட்டியல் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்ட நபர்களை மட்டுமே நாம் தேர்வு செய்து பட்டியலிட முடியும். இவர்களுக்கு ஸ்டோரி மற்றும் குறிப்புகளை அனுப்பலாம். இந்த நிலையில் instagram செயலில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு ரீல்ஸ் மற்றும் நமது இடுகைகளை நாம் அனுப்பி கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே இன்ஸ்டாகிராமில் மேலும் சில அப்டேட்டுகள் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.