உலக அளவில் வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் அன்லிமிடெட் பேக் அப் செய்வது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது வாட்ஸ் அப் செயலியில் பேக்கப் செய்ய தற்போது கூகுள் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுவரை எவ்வளவு வேண்டுமானாலும் அன்லிமிட்டட் ஆகப் பேக்கப் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி கூகுளின் ஒவ்வொரு கணக்கிறுக்கும் 15ஜிபி மட்டுமே இலவசமாக பேக்கப் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 15ஜிபிக்கு அதிகமாக இருந்தால் உங்களுடைய மொபைல் ஃபோனில் தேவையில்லாத பைல்கள் அனைத்தும் டெலிட் செய்ய நேரிடும். இந்த புதிய முறை டிசம்பர் மாதம் முதல் whatsapp பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு வரும் என்றும் அதன் பிறகு அனைத்து whatsapp பயனர்களுக்கும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.