சமூக வலைதளங்களில் வியூஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலரும் வினோதமான பிராங்க் (Prank) வீடியோக்களைச் செய்து வரும் நிலையில், சண்டிகரில் ஒரு இளம்பெண் செய்த காரியம் அவருக்கே வினையாக முடிந்துள்ளது.
அங்குள்ள ஒரு சாலையோரக் கடையில் ஒரு நபர் அமைதியாக அமர்ந்து மோமோஸ் (Momos) சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்தப் பெண், அந்த நபருக்குத் தெரியாமலேயே அவரது தட்டில் இருந்த மோமோஸை எடுத்துச் சாவகாசமாகச் சாப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இதைப் பார்த்து அந்த நபர் குழப்பமடைந்தாலும், அந்தப் பெண் “இது வெஜ் மோமோஸா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், “இல்லை, இது நான்-வெஜ் மோமோஸ்” என்று சொல்ல, அடுத்த நொடியே அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
தீவிரமான சைவ உணவாளரான அந்தப் பெண், தெரியாமல் அசைவத்தைச் சாப்பிட்டதை உணர்ந்ததும், அருவருப்பில் அந்த இடத்திலேயே வாந்தி எடுத்துள்ளார்.
“பிராங்க் செய்யப்போய் கடைசியில் வாந்தியில் முடிந்ததா?” என இந்த வீடியோவை இணையத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துச் சிரித்து வருகின்றனர். “இதுதான் இன்ஸ்டன்ட் கர்மா” என நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை செமையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.
