குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பி.டி.யு சிவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியின் ஆக்சிஜன் அளவு குறித்து, இளநிலை பெண் மருத்துவரான டாக்டர் கிரிஷாபென், மூத்த மருத்துவ அதிகாரியான டாக்டர் அஷ்வின் ரமணியிடம் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட விவாதத்தில் ஆத்திரமடைந்த மூத்த மருத்துவர், “எனக்குக் கற்றுத் தருவாயா?” என்று கூறி அந்தப் பெண் மருத்துவரை ஓங்கி அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் இடத்தில் நடந்த இந்த அநியாயத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக வேலையை நிறுத்திவிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். தாக்குதல் நடத்திய மூத்த மருத்துவர் அடிக்கடி மது அருந்திவிட்டுப் பணிக்கு வருவதாகவும், இளநிலை மருத்துவர்களிடம் தொடர்ந்து தரக்குறைவாக நடந்து வந்ததாகவும், இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மருத்துவர்களின் தொடர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, மாநில அரசு உடனடியாக இதில் தலையிட்டது. அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் மோனாலி மகடியாவை அவரது கூடுதல் பொறுப்பிலிருந்து விடுவித்து அரசு அதிரடி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பிரத்யும்னநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட மூத்த மருத்துவர் அஷ்வின் ரமணியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அந்த மருத்துவர் பணிக்கு வரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

🚨 Senior Medical Officer Ashwin Ramani Abused Resident Dr Krisha Shingala and threw phone and file on her face. 🚨

Krisha who works in Rajkot civil hospital told senior Dr to shift patient In emergency ward :

Krisha : Sir , patient vitals are non recordable we should shift in… pic.twitter.com/yF8WaWgAKD

— Jeet (@JeetN25) August 21, 2026

“>

சிகிச்சை அளிக்கும் இடத்தில் சக பெண் மருத்துவருக்கு நேர்ந்த இந்த வன்முறைச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. தவறு செய்த மருத்துவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கே சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.