நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து நீண்ட நாட்களாகப் பரவி வரும் விவாகரத்து வதந்திகள் குறித்து, தஞ்சை தவெக கூட்டத்திற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அளித்த பேட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பான கேள்விக்கு மிகவும் துணிச்சலாகப் பதிலளித்த அவர், “யார் யாருக்கோ இரண்டு மனைவிகள் இருக்கும்போது, எங்களிடம் பணம் இருக்கிறது.. நாங்கள் வைத்துக்கொள்வோம், வைத்துக்கொள்ளாமல் போவோம்” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளங்களில் ‘சென்சேஷனல்’ ஆகி, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தன்னுடைய தலைவன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களைச் சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்களின் இந்த வேகம் ஒருபுறம் வியப்பைத் தந்தாலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு கட்சியின் தலைவர் குறித்த சர்ச்சைகளுக்கு அந்தத் தொண்டர் அளித்த பதில், தவெக-வின் மீதான கவனத்தை இன்னும் அதிகரித்துள்ளது. வதந்திகளைப் பரப்பி வருபவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த ரசிகை பேசியிருந்தாலும், அது தற்போது சாதக பாதகமான பல விமர்சனங்களை அள்ளிக் குவித்து வருகிறது.
