தமிழகத்தில் 39 தொகுதிக்கான மக்களவைத் தேர்தலும் விலவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு இன்னும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு இன்னும் 45 நாட்கள் உள்ளதால் அதுவரை தமிழக மக்கள் அனைவரும் முடிவை அறிய காத்திருக்க வேண்டும்.
