உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது whatsapp ஸ்மார்ட் வாட்சிலும் கிடைக்கின்றது. “Wear OS 3” அல்லது அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட் வாட்சுகளில் இதனை பயன்படுத்த முடியும். Whatsapp செயலி மூலமாக உரைச்செய்தி மற்றும் குரல் செய்தி அனுப்புதல் ஆகியவை கிடைக்கும். ஸ்மார்ட் வாட்ச் மூலமாக நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்வதற்கும் உள்வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவும் முடியும்.

இந்த புதிய இயங்கு தளம் சாம்சங், கூகுள், Fossil, பிற பிரிமியம் ஸ்மார்ட் வாட்சுகளில் கிடைக்கின்றது. தற்போது ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே இது கிடைக்கின்றது. Wear OS உள்ள வாட்ச் களில் மட்டுமே இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். மேலும் இந்த சேவை இன்னும் ஆப்பிள் வாட்சில் கிடைக்கவில்லை. உங்களின் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கை இதில் இணைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.