ஜெனரேட்டிவ் ஏ ஐ சாட்போட் ஆன chat GPT இன் ஆண்ட்ராய்டு செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் அறிமுகமான இந்த செயலி உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த சாட்போட் பயனர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும். அதாவது கதை, கட்டுரை, கவிதை மற்றும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் என அனைத்தையும் நமக்கு வழங்கும்.

இந்த மொபைல் பயன்பாடு ஏற்கனவே ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கின்றது. Chat GPT இன் ஆண்ட்ராய்டு செயலி நேற்று இரவு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா, வங்காளதேஷ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.