இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது அதிக அளவு உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது சில தவறை செய்தால் அது வீணாகிவிடும். அதாவது நீங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய கூர்மையான ஊசியை பயன்படுத்தக் கூடாது. சுத்தம் செய்ய கூர்மையான ஊசி பயன்படுத்தும் மொபைல் போன் கடைக்காரர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரியும்.

ஆனால் அந்த தொழில்நுட்பம் முழுமையாக நமக்கு தெரியாது. சில ஸ்மார்ட் போனை சுத்தம் செய்ய தங்கள் வீட்டில் இருக்கும் ஹுட்டிங் ஃப்ளோவரை பயன்படுத்துவார்கள். ஆனால் அது உண்மையில் மிகவும் ஆபத்தானது. ஹீட்டர் பயன்படுத்தி சுத்தம் செய்யும்போது எந்த பொருள் சேதம் அடைகிறதோ அதற்கு ஏற்ப நம்முடைய செலவுகளும் அதிகமாக இருக்கும். திரவ கிளீனர்கள் கொண்டு ஸ்மார்ட் போனை சுத்தம் செய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் ஆல்கஹால் அடிப்படையான சீனரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனைப் போலவே ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்கிரீனை சுத்தம் செய்யும் போது சாதாரண துணியை பயன்படுத்தாமல் மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்தலாம்.