உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை  பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி ஐஓஎஸ் பயனர்கள் தங்களுடைய whatsapp கணக்குடன் மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்வதற்கான புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நம்முடைய மெயில் தொடர்பான விவரங்கள் மற்றவர்களுக்கு தெரியாது என்றும் நெட்வொர்க் சிக்கல்கள் அல்லது பிற தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக வாட்ஸ் அப்பில் எஸ்எம்எஸ் களை பெற முடியாத நிலையில் மின்னஞ்சல் முகவரி மூலமாக பின் உள்ளிட்ட எஸ் எம் எஸ் களை நாம் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் தற்போது ஐபோனின் ஆப் ஸ்டோரில் உள்ள புதிய பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரியை சேர்க்க அக்கவுண்ட் என்ற ஆப்ஷனில் சென்று ADD MAIL என்பதை கிளிக் செய்ய வேண்டும் . தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.