உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் பொதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆப்பிள் ஐஓஎஸ், whatsapp வெப் ஆகியவற்றில் மட்டுமே கிடைத்து வந்த மெசேஜ்களை தேடும் வசதி இனி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பழைய ஞாபகங்களை மிகவும் எளிதாக மீட்டெடுக்கலாம்.

அதாவது உங்களுடைய நண்பர் அல்லது நெருங்கிய நபருக்கு அனுப்பிய குறுந்த தகவல்களை சிரமம் இல்லாமல் எளிதில் எடுக்க முடியும். அடுத்து வரும் வாட்ஸாப் அப்டேட்டில் search பாரில் புதிதாக காலண்டர் பட்டன் இருக்கும். இதனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தேதியில் என்ன மாதிரியான மெசேஜ்களை யாருக்கு அனுப்பி உள்ளோம் என விரைவில் தெரிந்து கொள்ளலாம். அதனைப் போலவே பல முக்கியமான மெசேஜ்களை தேதி வாரியாக எந்தவிதமான சிரமமும் இல்லாமல் படிக்க முடியும். ஆனால் இந்த புதிய வசதி இன்னும் வளர்ச்சி கட்டத்தில் உள்ள நிலையில் விரைவில் இந்த வசதிகளை வாட்ஸ்அப் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.