நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆடு மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகள் கலந்து கொண்டது. முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் மனிதர்கள் அல்லாமல் ஆடு மாடுகள் ஏராளமாக நின்றது ஆச்சரியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் சீமான் பேசியதாவது, நான் ஆடு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் வைப்பது என்பது அரிதாகிவிட்டது.

என்னிடம் மட்டும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தீர்கள் என்றால் நான் ஆடு மாடு மேய்க்கும் வேலையை அரசு வேலையாக மாற்றிக் காட்டுவேன். வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பது கிடையாது. ஆடு மாடுகள் மேய்ப்பது என்பது அவமானம் கிடையாது அது வெகுமானம்.

திருமால், கண்ணன், பெருமாள், இயேசு, நபிகள் நாயகம் ஆகியோர் கூட ஆடு மாடுகள் மேய்த்துள்ளனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை அதற்காகத்தான் மாட்டுப்பொங்கல் கூட வைக்கிறோம். இனிமேல் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள். ஆடு மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் எதற்காக ஆவின் நடத்துகிறீர்கள். மேலும் மாடு வளர்த்தால் அவமானம் என்று நினைக்கும் நீங்கள் எதற்காக பால் குடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.