திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். இந்தத் தேர்தல் முடிவுகளில் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் திமுகவினர் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

​”நாம் இதுவரை டீக்கடைகளில் பேசிய அரசியலை இனி சமூக வலைதளங்களில் பேச வேண்டும். ஒவ்வொரு திமுகவினரும் சமூக வலைதளங்களில் நேரடியாகப் பங்கெடுத்துச் செயல்பட வேண்டும்” என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், நமது பரப்புரை ஸ்டைல் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் இனி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஆன்லைன் களத்தில் கட்சி வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஸ்டாலினின் இந்த அதிரடி மாற்றங்கள் திமுகவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.