அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல் முறையில் ஒரு புதிய மற்றும் அதிர்ச்சிகரமான ‘டாக்டிக்கல்’ (Tactical Phase) கட்டத்தை எட்டியுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி மஜித் மௌசவி வெளியிட்டுள்ள அறிவிப்பு உலக நாடுகளை உறைய வைத்துள்ளது.

“இனி வரும் காலங்களில் ஈரானில் இருந்து ஏவப்படும் எந்தவொரு ஏவுகணையும் 1,000 கிலோவிற்கும் (ஒரு டன்) குறைவான வெடிபொருட்களை சுமந்து செல்லாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சாதாரண ஏவுகணைகளை விட பல மடங்கு அதிக அழிவுத்திறன் கொண்ட இந்த ‘மெகா’ ஏவுகணைகள், எதிரி நாடுகளின் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் அதிநவீன ராணுவ நிலைகளை முழுமையாகத் தரைமட்டமாக்கும் வல்லமை கொண்டவை.

குறிப்பாக, கடந்த மார்ச் 5-ம் தேதி இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தைத் தாக்கிய ‘கோரம்ஷார்-4’ (Khorramshahr-4) ஏவுகணைகள் 1,000 கிலோ வெடிபொருட்களுடன் ஏவப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இந்த திடீர் அறிவிப்பு, போர் சூழலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதோடு, வளைகுடா நாடுகளில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.