மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணைத் முட்டி வரும் நிலையில், வல்லரசு நாடான சீனா மட்டும் எதற்கும் கவலையின்றி நிம்மதியாக இருக்கிறது.
இதற்குப் பின்னால் சீனா போட்டுள்ள மிக நீண்ட கால ‘ஸ்கெட்ச்’ தான் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரானிடம் இருந்து 90 சதவீத எண்ணெயை வாங்கும் சீனா, ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் (Heavy Discount) எண்ணெயைக் குவித்து வருகிறது.
இதுமட்டுமன்றி, அவசர காலத் தேவைக்காக சுமார் 140 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சீனா ரகசியமாகச் சேமித்து வைத்துள்ளது.
மேலும், சீனாவில் மின்சார வாகனங்களின் (EV) எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதன் சார்பு நிலை பெருமளவு குறைந்துவிட்டது.
ஒருவேளை வளைகுடா நாடுகளின் விநியோகம் முழுமையாக நின்றால் கூட, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க சீனாவிடம் மாற்று வழிகள் தயாராக உள்ளன.
இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய் உயர்வால் திணறி வரும் நிலையில், சீனா மட்டும் குலுங்காமல் இருப்பது உலக நாடுகளைப் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
