பெங்களூருவில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரிடம் நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுப்போக்குவரத்து வாகனத்தில் பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அஞ்சும் சூழலில், இந்த அநாகரிகச் செயல் கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த அந்தப் பெண், தனக்கு நடந்த அநீதியைக் கண்டு அமைதியாக இராமல், உடனே குரல் எழுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். பெண்ணின் அலறலையும் புகாரையும் கேட்ட பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் சற்றும் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கையில் இறங்கினர்.
பயணிகள் அனைவரும் பார்த்திருக்க, அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபரை ஓட்டுநர் சரமாரியாக எட்டி உதைத்தும், கண்ணாம்பின்னாவென்று அடித்தும் வீராப்பாகப் பிடித்துச் சாத்தினார். பேருந்து ஓட்டுநரின் இந்தத் துணிச்சலான மற்றும் உடனடி அதிரடி நடவடிக்கை, அங்கிருந்த மற்ற பயணிகளுக்கும் பெரும் தைரியத்தையும் ஆதரவையும் அளிப்பதாக அமைந்தது.
சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் மற்றும் பேருந்து ஊழியர்களின் உதவியுடன் அந்த நபர் பிடிபட்டு, காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பெண் பயணிக்கு நேர்ந்த அநீதிக்கு உடனடி நீதி வழங்கும் வகையில் செயல்பட்ட பேருந்து ஓட்டுநரின் இந்தச் செயலை இணையவாசிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோன்ற உடனடி சாட்டையடியும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுமே தகுந்த பாடமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Bravo to the woman who stood up against harassment on a BMTC route 500D bus near Hebbal!
Big salute to driver Praveen, who stopped the bus and stopped the accused. Public transport gets safer when victims speak up and people act. Police are taking action. #Bengaluru#Viralvideo pic.twitter.com/TPAjrv06jq— Gummalla Lakshmana (@GUMMALLALAKSHM3) July 25, 2026
“>
