தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் பயங்கரமான வெள்ளம் வந்தது. அந்த வெள்ளத்தில் ஒரு தாய் பூனை மாட்டிக் கொண்டது. அது தன் குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, குட்டியைத் தூக்கிக்கொண்டு ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டது. அங்கிருந்து கீழே வர முடியாமல், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தக் குட்டியுடன் போராடிக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற வந்த மீட்புக் குழுவினர் (Rescue Team) இந்த பூனையையும் அதன் குட்டியையும் பார்த்தனர். உடனே அவர்கள் அந்த இரண்டு விலங்குகளையும் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.