கனடாவின் கடற்கரையில் ஒரு பெண் காட்டு ஓநாய் (Wolf) செய்த செயல் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடலில் இருந்த நண்டு பிடிக்கும் வலையை நீந்திக் சென்று, கயிற்றை இழுத்து வெளியே எடுத்து, அதில் இருந்த இறையைச் சாப்பிட்டது. இந்தச் சம்பவம், ஒரு ஓநாய் ஒரு கருவியைப் பயன்படுத்துவதற்கான முதல் ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Incredible. This wolf sees a buoy out in deep water and recognizes it’s attached to a crab trap filled with food as bait. She swims over to the buoy and pulls it to shore, knowing it’ll drag the trap w/ bait out, too. Voila, free meal.
Animals use tools, just like us. pic.twitter.com/Sf55r8XS4g
— Wayne Hsiung (@waynehhsiung) November 19, 2025
கேமரா காட்சிகளில், ஓநாய் விளையாட்டுக்காகச் செய்யாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு செயல்பட்டது பதிவானது. இந்த ஓநாய் மனிதர்களைப் பார்த்து இந்த நுட்பத்தைக் கற்றுக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
