கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அண்மையின் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறினார்;
அதில் அவர் கூறியது; தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு; “சில காலங்களில் தெரியும் அது என்னவென்று”…இந்த முறை ரயில்வே துறையில் 6500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு 6300 கோடி கொடுக்கப்பட்டது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெயர் இல்லை அதனால் புறக்கணிக்கிறார்கள் என்று கூறுவது சரியல்ல..அது அப்படி அல்ல ..
அதே நிலையில் தமிழகத்திடம் நான் கேட்கிறேன்…. நீங்கள் 3.5 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறீர்கள் அதில் ஒரு 1000 கோடி வெள்ளத்திற்கு ஒதுக்க முடியாதா?.. அப்படி என்றால் உங்களிடம் அந்த அளவுக்கு திறமை இல்லையா? வறட்சி வரும் என்று தெரியும் அல்லவா? வெள்ளம் வரும் என்று தெரியும் அல்லவா?.. உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் ஒதுக்கீடு செய்ய முடியாதா?? எல்லாமே மத்திய அரசுதான் கொடுக்க வேண்டுமா,…மத்திய அரசும் கொடுத்து ஆக வேண்டும்.. அது வேற விஷயம்..மாநில அரசிற்கு என்று கடமை இல்லையா..? நீங்கள் திட்டமிடுங்கள்..இதுதான் உண்மையான திட்டமிடல்..என்று தனது கருத்தை தெரிவித்தார்.
