அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷில்பா சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதில், “உங்கள் மத உணர்வுகள் காயப்பட்டிருப்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் உங்கள் பகுதியில் போராட்டங்களை நடத்தி அமைதியைக் குலைப்பதால் உங்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக அளவில் இந்தியா மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படும் வேளையில், இதுபோன்ற போராட்டங்கள் இந்தியாவைக் கேலிப் பொருளாக்கிவிடும் என்று கவலை தெரிவித்துள்ள அவர், ஈரானில் உள்ள மக்களே காமேனியின் மரணத்தைக் கொண்டாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் வாழும் நாட்டை நேசியுங்கள்; உங்களை மதிக்காத ஒரு நாட்டுக்காக உங்கள் நாட்டின் மரியாதையைச் சிதைக்காதீர்கள்” என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். ஷில்பாவின் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
