ஜெர்மனியில் நடைபெற்ற புகழ்பெற்ற மிதிவண்டி பந்தயத்தின் போது, முதிய பெண் ஒருவர் அஜாக்கிரதையாக ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதியதில், பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தய தூரத்தை நோக்கி வீரர்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்த வேளையில், திடீரென பந்தயப் பாதைக்குள் புகுந்த அந்த முதிய பெண், தனது ஸ்கூட்டரால் எதிர்பாராத விதமாக முன்வரிசையில் வந்த வீரர் மீது மோதினார். இதில் நிலைதடுமாறி அவர் விழ, அவருக்குப் பின்னால் அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த மற்ற வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் கொத்தாக விழுந்து தூக்கி வீசப்பட்டனர்.
Bei der Trofeo in Habkirchen (Saarland) 🤯 pic.twitter.com/3gUOrzHvXV
— Flaschenbuddel (@Flaschenbuddel) June 14, 2026
இந்த கோர விபத்தில் பல வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பந்தயப் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படாததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பார்ப்போரைக் பதற வைக்கும் இந்த விபத்தின் நேரடி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
