மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், கத்தாரில் தங்கியுள்ள தனது நாட்டு குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கத்தாரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், தேவையில்லாமல் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கின் எதிரொலியாகவே இந்த அதிரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கச் சொத்துக்களை ஈரான் குறிவைக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுமே இப்போது ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.

கத்தாரில் லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த எச்சரிக்கை அங்குள்ள இந்தியர்களிடையே பெரும் கலக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.