பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, சாதாரண பொருட்களின் விலை கூட கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 2021 மாடல் பழைய ‘சுஸுகி ஆல்டோ’ (Suzuki Alto) கார் ஒன்றின் விலை 24 லட்சம் ரூபாய் என அதன் உரிமையாளர் கூறுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் இதே விலைக்கு பல புதிய சொகுசு கார்களை வாங்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் 321 ரூபாய்க்கும், டீசல் 335 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த நிலையில், பழைய ஆல்டோ காருக்கு 24 லட்சம் ரூபாய் கேட்பதை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். “இந்த காசுக்கு இந்தியாவில் ஒரு ஷோரூமே வைக்கலாம்”, “எங்க ஊர்ல 20 ஆயிரத்துக்கு கிடைக்கும்” என இந்திய ரசிகர்கள் இந்த வீடியோவை வைத்து பாகிஸ்தானை வச்சு செய்து வருகின்றனர்.
