அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இதழியல் மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உயரிய விருதை இந்தியாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்.கே. மற்றும் சுபர்ணா சர்மா ஆகியோர் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். விருது வென்றவர்களில் ஒருவரான ஆனந்த் ஆர்.கே. மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர், சுபர்ணா சர்மா டெல்லியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சன் என்பவருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதழியல் துறையில் இவர்கள் செய்த அரிய சாதனையைப் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
