வெனிஸ் பிளான்யேல் 2026 கலை விழாவில், ஆஸ்திரிய கலைஞரான புளோரெண்டினா ஹோல்சிங்கர் உருவாக்கியுள்ள ‘சீவேர்ல்ட் வெனிஸ்’ என்ற கலைப்படைப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வினோதமான மற்றும் துணிச்சலான படைப்பில், ஒரு பெண் கலைஞர் நிர்வாணமாக ஒரு பெரிய வெண்கல மணியின் உள்ளே தலைகீழாகத் தொங்கியபடி, தனது உடலையே மணியின் நாக்காகப் பயன்படுத்தி ஓசையை எழுப்புகிறார்.
கடல் மட்டம் உயர்ந்து வரும் ஆபத்தையும், அதனால் எதிர்காலத்தில் வெனிஸ் நகரம் மூழ்கும் அபாயத்தையும் எச்சரிக்கும் ஒரு ‘கிளைமேட் அலாரமாக’ இந்தச் செயல் சித்தரிக்கப்படுகிறது.
இந்தக் கண்காட்சி அரங்கம் ஒரு தீம் பார்க் போலவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெட்-ஸ்கி பயன்படுத்துவது மற்றும் உடல் திரவங்களைச் சேகரிக்கும் தொட்டி போன்ற காட்சிகள் மூலம் சுற்றுலாத் துறை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மனிதர்களின் அலட்சியம் குறித்து விமர்சிக்கப்படுகிறது.
This performance is wild—turning a massive bell into a climate alarm with raw physicality. Powerful statement!
— Mohsin Dayal (@Mohsin_hassanmh) May 6, 2026
“>
நிர்வாணம், உடல் வலிமை மற்றும் சமூகக் கருத்துகளைத் தனது கலை மூலம் வெளிப்படுத்தும் ஹோல்சிங்கர், இதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார். இவரது இந்த வித்தியாசமான முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
