தென்னாப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்ட ஒரு மிரட்டலான வைல்டு லைஃப் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.  அந்த வீடியோவில், சீற்றம் கொண்ட ராட்சத சிங்கம் ஒன்று சொகுசு எஸ்யூவி (SUV) காரின் பின் பக்கத் டயரைச் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதைக் காண முடிகிறது. கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த விலங்கு, தன் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி காருக்கு அருகே நின்றுகொண்டு டயரை நசுக்கத் தொடங்கும் காட்சிகள் பார்ப்பவர்க்கே நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

அதேவேளையில், துளியும் பயம் இல்லாமல் சிங்கத்தின் மிக அருகில் சென்று, ஓட்டுநரைப் பாதுகாப்பாகக் காரை மெல்ல மெல்ல முன்னோக்கி நகர்த்துமாறு ஒரு நபர் அறிவுறுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது . இந்தத் துணிச்சலான சாகசத்தைச் செய்தவர் பிரபல வனவிலங்கு ஆர்வலரும் கன்டென்ட் கிரியேட்டருமான ‘டீன்’ ஆவார். அந்தச் சிங்கங்கள் தன்னைத் தன் குடும்ப உறுப்பினராகவே கருதுவதால் அவற்றுடன் நெருங்கிப் பழகும் உரிமையை அவர் பெற்றுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dean Schneider (@dean.schneider)

டீன் ஷெய்ட்ரின் மீது எந்தத் தாக்குதலும் தொடுக்கப்படவில்லை என்றாலும், கோபம் தலைக்கேறிய அந்தச் சிங்கம் காரின் டயரைச் சில நொடிகளுக்குள் காகிதம் போலப் பிய்த்து எறிந்துள்ளது. எவ்வளவுதான் அதிநவீன மற்றும் பலத்த பாதுகாப்பு கொண்ட பெரிய வாகனங்களாக இருந்தாலும், இயற்கையின் உண்மையான மன்னனான காட்டு மிருகங்களின் இயற்கையான ஆற்றலுக்கு முன் அவை எத்தகைய பலவீனமானவை என்பதை இந்தச் சம்பவம் அப்பட்டமாக நிரூபித்துக் காட்டியுள்ளது.