பெங்களூருவில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் யூலியா அஸ்லமோவா என்ற ரஷ்யப் பெண்மணி, தனது குடும்பத்துடன் இந்தியாவில் வாழ்வது குறித்த மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் அண்டை வீட்டார் கலாச்சாரம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. மற்ற வெளிநாடுகளைப் போலன்றி, இங்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து வைத்திருப்பதும், ஆபத்து காலங்களில் உதவிக் கொள்வதும் தமக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கடும் குளிரோடு ஒப்பிடுகையில் பெங்களூருவின் இதமான வானிலை மற்றும் பசுமை தமக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பணிச் சூழல் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசிய யூலியா, இங்கு சக ஊழியர்கள் ஒரு குடும்பமாகப் பழகுவதை வெகுவாகப் பாராட்டுகிறார். ஊழியர்களுக்குத் தேநீர், சிற்றுண்டி என உபசரிப்பதும், பண்டிகைகளை அலுவலகங்களில் அனைவரும் இணைந்து கொண்டாடுவதும் வியப்பளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
மேலும் பெங்களூருவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வந்தாலும், இங்கிருக்கும் வாய்ப்புகளும் அன்பான மக்களும் இந்தியாவைத் தனது சொந்த வீடாக உணரச் செய்வதாக அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். கைகளால் உணவு உண்பது மற்றும் கூட்டுக் குடும்பமாக வாழ்வது போன்ற இந்திய மரபுகளை அவர் மனதார விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளார்.
