பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை இந்தியாவில் சேர்ந்தவர்களும் சீனாவை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் மலேசியாவில் தங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டார்.