கிரீஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து 6000 டன் உப்புகளுடன் சரக்கு கப்பல் புறப்பட்டு உள்ளது. இந்த கப்பல் லெஸ்போஸ் தீவின் அருகே வந்தபோது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு கடும் புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த சரக்கு கப்பலில் சிரியாவை சேர்ந்த இருவர் இந்தியாவை சேர்ந்த 4 பேர் எகிப்தை சேர்ந்த 8 பேர் என 14 பேர் பயணித்துள்ளனர்.

எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் உயிர் தப்பியதாகவும் ஒருவர் உயிரிழந்தார் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது இதுவரை உறுதியாக வில்லை. மேலும் மாயமான 12 பேரை தேடும் பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.