இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதற்கிடையில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியால் சிறுபக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒப்புக்கொண்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்த ப்ளேட் லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு போன்ற பிரச்சனைகள் அரிதான சந்தர்ப்பங்களில் ஏற்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.