இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் ரோஷன் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்து இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இலங்கை அதிபர், அவரது ஆலோசகரை பொறுப்பு என ரோஷன் பேசியிருந்தார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அதிபர் ரனில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரனில், ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை குறிப்பிட்டு பேசிய நிலையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கவால் தனது உயிருக்கு ஆபத்து என நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.