பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வர சீனா அனுமதி வழங்கி உள்ளது. டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு குடிமக்களும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்கு வரலாம் என சீனா அனுமதி வழங்கி உள்ளது.

சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கிக் கொள்ளலாம் என சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, “சீனாவின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு” உதவும் என்று செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.