தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்ட வைத்திருந்த செங்கலை தான் எடுத்து வந்தது குறித்து வேடிக்கையாக பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தர்மபுரி பிரசாரத்தில் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் அமைக்க பாஜகவினரும் எடப்பாடியும் ஒரு செங்கல் நட்டார்கள். அதை நான் எடுத்து வந்து விட்டேன். அந்த செங்கலை இன்று வரை தேடி வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டினால் மட்டுமே அந்த செங்கலை திருப்பிக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.