கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம் பெண் தளபதி விஜயை வைத்து உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஸ்டென்சில் முறையில் நடிகர் விஜயின் படத்தை வெறும் கருப்பு பேனாவை மட்டும் பயன்படுத்தி 22-க்கு 28 இன்ச் என்ற அளவில் வரைந்துள்ளார். அவர் நடிகர் விஜயின் புகைப்படத்தை 1 மணி நேரம் 56 நொடிகளில் வரைந்து சாதனை படைத்துள்ளார். இதனால் நடிகர் விஜயின் படத்தை ஸ்டென்சில் முறையில் போர்ட்ரைட்டாக வெறும் கருப்பு பேனாவை மட்டும் பயன்படுத்தி வேகமான நேரத்தில் வரைந்தவர் என்ற சாதனையை அபர்ணா படைத்துள்ளார்.

இந்த சாதனைக்காக அபர்ணா ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜயின் புகைப்படத்தை வரைந்து உலக சாதனை படைத்த அபர்ணாவுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.