பங்களாதேஷில் போக்குவரத்து விதிகளை மீறுவதும், மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்வதும் சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, அங்குள்ள மக்கள் ரயிலின் உள்ளே அமருவதை விட, அதன் கூரை மீது அமர்ந்து பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

அயர்லாந்தைச் சேர்ந்த சீன் ஹம்மண்ட் என்ற பயணப் பதிவர், சமீபத்தில் டாக்கா முதல் சிட்டகாங் வரை சுமார் ஏழு மணி நேரம் ரயிலின் கூரை மீது அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டார்.

ரயிலின் மேல் அமர்ந்து கொண்டு உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டு அவர் வியப்படைந்தாலும், இந்தப் பயணம் மிகவும் அச்சுறுத்தலாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின் போது பலமுறை மரணத்தின் விளிம்பிற்கே சென்று வந்ததாக அவர் ரோம் சிலிர்க்கும் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ரயில் அதிவேகமாகச் செல்லும்போது பலமான காற்று, குறுக்கே வரும் மரக்கிளைகள் மற்றும் இரும்பு மின் கோபுரங்கள் அவரது தலையில் மோதிக் காயப்படுத்தும் வகையில் மிக அருகில் கடந்து சென்றுள்ளன.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இவ்வளவு ஆபத்தான செயலைச் செய்து அதை ஊக்கப்படுத்த வேண்டாம்” எனப் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sean Hammond (@seanhammonds)

“>

அதே சமயம், அந்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலும் மக்களின் இத்தகைய கட்டாயப் பயணங்களும் பேசுபொருளாகியுள்ளது.