லண்டனில் சமோசா விற்று பிரபலமான பீகார் நபரைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு பீகார் இளைஞர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தெருக்களில் டீ மற்றும் போஹா (அவல்) விற்று இணையத்தில் வைரலாகி வருகிறார். பிரபாகர் பிரசாத் என்ற இந்த நபர், அங்கு ஒரு கப் டீயை 782 ரூபாய்க்கும், ஒரு பிளேட் போஹாவை 1,512 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார்.
இவ்வளவு அதிக விலை இருந்தபோதிலும், அவரது உணவின் சுவைக்காகவும் தரத்திற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்படும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “இடத்தில் தான் மதிப்பு இருக்கிறது, உணவில் இல்லை” என சிலர் கூறினாலும், “சுவை நன்றாக இருந்தால் மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பார்கள்” என மற்றவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
மேலும், லாஸ் ஏஞ்சல்ஸில் இவரைப் பார்ப்பதற்கு ‘இயேசு கிறிஸ்து’ போலவே இருப்பதாக அங்கூர் மக்கள் கூறுவதாகவும் பிரபாகர் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“>
இந்திய உணவுகள் வெளிநாடுகளில் இவ்வளவு மதிக்கப்படுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
