சாலையில் செல்லும் பெண்கள் அவ்வப்போது சில ஆண்களின் அநாகரீகமான செயல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவத்தில், ஈ-ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன், பைக்கில் சென்ற பெண்ணைப் பார்த்து மிகவும் அநாகரீகமான முறையில் சைகை செய்தான்.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த அந்தப் பெண், உடனடியாகத் தனது பைக்கை நிறுத்திவிட்டு அந்த இளைஞனைப் பிடித்து நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கினார். அந்த இளைஞன் “தவறுதலாக நடந்துவிட்டது” என்று கெஞ்சிய போதிலும், அந்தப் பெண் அவருக்குத் தகுந்த பாடம் புகட்டினார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.

“இப்படித்தான் செய்ய வேண்டும், அப்போதுதான் மற்றவர்களுக்குப் பயம் வரும்” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனவரி 13-ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

“>

 

இச்சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.