அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ரோஸ் கிரான்ஸ் அவென்யூ வழியாக நடந்து வந்த ஒருவரிடம் வழிமறித்து துப்பாக்கியை காட்டி பணம் தரும்படி மிரட்டியுள்ளார். ஆனால் தன்னிடம் மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டு மட்டுமே உள்ளது என்று பாதிக்கப்பட்ட நபர் கூறிய நிலையில் அவரை கொள்ளையனே தன்னுடைய காரில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தரும்படி கூறியுள்ளார். அவரும் தன்னுடைய ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை எடுத்து கொள்கையனிடம் கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்டவரை ஏற்றி வந்த இடத்திலேயே மீண்டும் கொள்ளையன் பத்திரமாக இறக்கி விட்டார்.
அதேசமயம் தனக்கு நிறைய கட்டணங்கள் செலுத்த வேண்டி இருப்பதால் கொள்ளையடித்ததாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் கூறியது மட்டுமல்லாமல் உங்களின் செல்போனை நாளை திருப்பித் தந்து விடுகிறேன் என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து இன்ஸ்டால் ஐடியை பெற்றுக் கொண்ட அந்த கொள்ளையன் நாம் இருவரும் தொடர்பில் இருப்போம் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் கொள்ளையனை வலை வீசி தேடி வருகிறார்கள்.
