இஸ்ரேலில் 12 வயது சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து ஏற்பட்டு 90 சதவீதம் தலை துண்டாகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் கழுத்து பகுதியில் தசை நார்கள் கிழிந்து அவரது மண்டை ஓடு முதுகுத்தண்டின் மேற்பகுதியில் இருந்து பிரிந்துள்ளது.

எழும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஓஹத் எய்னவ் கூறுகையில் பல மணி நேரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில் சிறுவனின் தலையை உடலோடு பொருத்த பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் திறமையாலும் புதிய தொழில்நுட்பங்களினாலும் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடிந்தது. சிறுவன் உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்த போதிலும் மருத்துவ குழுவின் தீவிர முயற்சியால் சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஆனாலும் சிறுவனின் உடல் நலனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.