சீனாவை சேர்ந்த வாங் யுன் எனும் 39 வயது ஆசிரியை 2019 ஆம் வருடம் சக ஆசிரியையுடன் ஏற்பட்ட தகராறில் மழலையர் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரேட் எனும் ரசாயனத்தை கலந்துள்ளார். இதனால் ஒரு குழந்தை உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததோடு 24 குழந்தைகள் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாங் யுன் ஆசிரியைக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தடை செய்யக்கோரி அந்த ஆசிரியை மேல்முறையீடு செய்த போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.