ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை அணி 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து பேசுவதை தவறவிட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அவருடைய சம்பளத்திலிருந்து ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

இதேபோன்று ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு தற்போது ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று இம்பேக்ட் வீரர் உள்ளிட்ட 11 மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.