அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் லீவ் டில்லி கோல்சன் எனும் பெண் தனக்கு மணமகன் வேண்டும் என்றும் மணமகனை அறிமுகப்படுத்துபவருக்கு 4 லட்சம் அன்பளிப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டிக் டாக் பக்கத்தில் அவர் கூறியதாவது கடந்த ஐந்து வருடமாக தனியாக இருக்கிறேன். டேட்டிங் செய்து சோர்ந்து விட்டேன். எனக்குப் பிடித்தமானவரை டேட்டிங் ஆப் மூலமாகவோ அல்லது நேரில் சந்தித்தோ எந்த பலனும் கொடுக்கவில்லை.

டேட்டிங் ஆப்பில் பழகுபவர்கள் உண்மையானவர்களாக இல்லை. ஆனால் நான் எனக்கு உண்மையாக இருக்கும் ஒரு உறவை தேடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். அதற்காக எனக்கு மணமகனை அறிமுகப்படுத்தி நான் அவரை திருமணம் செய்து கொண்டால் திருமண சான்றிதழில் கையெழுத்திட்ட உடன் மணமகனை அறிமுகப்படுத்தியவருக்கு 4 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்குவேன் எனக் கூறியுள்ளார்.