இத்தாலி ரோம் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த வருடம் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரித்த போது படிக்கட்டில் சிறுமி ஏறிய போது பின்னால் இருந்து அவரது ஃபேண்டை கேலியாகவே பிடித்து இழுத்ததாக கூறியுள்ளார். ஆனால் சிறுமியின் பின்பகுதியை ஆபாசமாக தொட்டதாகவும் அவரது உள்ளாடையை பிடித்து இழுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு 3 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அந்த காப்பாளரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதற்கு நீதிபதி கூறிய காரணம் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது இந்த சம்பவம் 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திலேயே நடந்திருப்பதால் குற்றத்திற்கான அளவுகோலை எட்டவில்லை என தான் கூறிய தீர்ப்பிற்கு நியாயம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இத்தாலி மக்கள் சமூக வலைதளங்களில் நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்து வருகின்றனர்.