கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உலக நாடுகள் பலவற்றில் வறுமை தலைவிரித்தாட தொடங்கியது. கொரோனாவுக்கு முன்பு பசியால் வாடுபவர் எண்ணிக்கை 61 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 73 கோடியாக அது அதிகரித்துள்ளது. அமெரிக்கா. ஆசியா, லத்தின் போன்ற நாடுகளில் உணவின்றி தவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கரீபியன், மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பசியால் வாடுபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக மக்கள் தொகையில் 240 கோடி பேர் அதாவது 30 சதவீதம் பேர் தினமும் உணவின்றி தவிப்பதாக ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. கொரோனா மட்டுமல்லாது ரஷ்யா-உக்ரைன்போரும் இதற்கு காரணம் என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.